Saturday, February 4, 2012

தஞாவுர் பெரிய கோவில் - இத்தாலியின் பைசா கோபுரம்

உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது , இந்த கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல் , ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது ,இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது ! இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது ! ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 - 1372)

நம் தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது , இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ ) எடை கொண்டது , உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம் , எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை !

சிந்தித்து பாருங்கள் சரியாக கட்டாமல் சாய்ந்து போன ஒரு கோபுரம் உலக அதிசயமா ? அல்லது ஆயிரம் வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக, மிக பிரம்மாண்டமாக நிற்கும் ஒரு கோபுரம் உலக அதிசயமா ?

 சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் ! 
 
  



Sunday, January 8, 2012

கவிஞர் நா.முத்துகுமார் கவிதைகள்

 தூர்

வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொருமுறை
விசேஷமாய நடக்கும்

ஆழ்நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்

கொட்டாங்கச்சி, கோலி, கரண்டி
கட்டையோடு உள் விழுந்த
துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே

சேறுடா சேறுடாவென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?

பகை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேல் வருவார்

இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்

மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க

Saturday, January 7, 2012

கவிஞர்.தபூ சங்கர் கவிதைகள்

நீ யாருக்கோ செய்த

மெளன அஞ்சலியைப்

பார்த்ததும்...

எனக்கும்

செத்துவிடத் தோன்றியது.


 
அற்புதமான காதலை மட்டுமல்ல

அதை உன்னிடம் சொல்ல முடியாத

அதி அற்புதமான மெளனத்தையும்

நீதான் எனக்குத் தந்தாய்.





thanks and regards,
கவிஞர்.தபூ சங்கர்


Wednesday, January 4, 2012

My favourite tweets

பெட்ரோல் விலை இரு வாரங்களுக்கு உயர்த்தப்படமாட்டாது - எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு #அப்புறம் வட்டியும் முதலுமா வாங்கிக்குவாங்க....


வருசா வருசம் வாழ்த்து சொல்ற மாதிரி விடிஞ்சதும் இதயும் சொல்றானுக “என்ன இருந்தாலும் போன நியூ இயர் மாதிரி இல்ல “ !


 இழப்பதற்கு எதுவும் இல்லை அன்பைத்தவிர பெறுவதற்கும் எதுவும் இல்லை அன்பைத்தவிர- எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

thanks and regards,
twitter

Happy new year

Happy new year to all friends and  bloggers...............all day is good day.........

Saturday, October 29, 2011

Anatomic theraphy

Anatomic theraphy Different concepts about diabectics and will explain the solutions..



watch and comment it...

Wednesday, September 21, 2011

GOOGLE PLUS OPEN FOR ALL

Thanks for waiting. Google+ is open to all! Join now.